புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (09:56 IST)

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிறந்த தினம் இன்று

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1965ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தார். 



இவரது முழு பெயர் அப்துல் ரஷித் சலீம் சல்மான் கான். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த சல்மான் கான் 1988ம் ஆண்டு முதல் திரைஉலகில் நடித்து வருகிறார். 
 
சல்மான் கான், 1988ல் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் அவர் ஒரு துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப்படமான மைனே பியார் கியா (1989) திரைப்படத்தில் தான் அவர் முதன்முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் வர்த்தரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது.
 
1990ல், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான நக்மாவுடன் அவர் இணைந்து நடித்த பாக்ஹி, பாக்ஹி என்ற ஒரேயொரு திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்த படமும் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டில், பத்தர் கே பூல் , சனம் பேவஃபா மற்றும் சாஜன் ஆகிய மூன்று வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.
 
1992-1993-ல் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வி அடைந்தன.
 
1994ல், மாதுரி தீட்சித்துடன் அவர் இணைந்து நடித்த ஹம் ஆப்கே ஹே கோன் திரைப்படத்தில் (சூரஜ் பர்ஜத்யாவுடனான அவரின் இரண்டாவது கூட்டணியில்) மீண்டும் வெற்றி நாயனாக மாறினார். அந்த படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் அதுவரை பாலிவுட்டின் மிகப் பெரிய வசூல் சாதனை அளித்த திரைப்படங்களில் ஒன்றாகவும் அது மாறியது. அதுவரையிலான காலத்தில், மிக அதிக வசூல் அளித்த திரைப்படங்களில் இந்த படம் நான்காவது இடத்தைப் பிடித்தது.
 
1995ல், அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, ராகேஷ் ரோஷனின் கரண் அர்ஜூன் வெற்றிப்படத்தில் மீண்டும் தம்மை நிலைநிறுத்தி கொண்டார். அந்த திரைப்படம் அவ்வாண்டின் இரண்டாவது மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 
 
1996-ஆம் ஆண்டு சல்மான் கானின் இரண்டு படங்கள் வெளியாயின. ஒன்று, அறிமுக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியால் இயக்கப்பட்டு மனிஷா கொய்ராலா, நானா பாட்டேக்கர் மற்றும் சீமா பிஸ்வாஸ் ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த காமோஷி: தி மியூசிக்கல் என்ற படமாகும். பாக்ஸ் ஆபீஸ் அளவில் இது தோல்விப்படமாக இருந்த போதினும், இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது. அடுத்ததாக அவரும், சன்னி தியோல் மற்றும் கரிஷ்மா கபூரும் இணைந்து நடித்த ராஜ் கன்வரின் அதிரடி படமான ஜீத்” வெளியாகி இருந்தது.
 
1997ல், ஜூடுவா மற்றும் அவ்ஜார் ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. முந்தையது கரிஷ்மா கபூருடன் இணைந்து, டேவிட் தாவனினால் இயக்கப்பட்ட நகைச்சுவை படம். இதில் அவர் பிறந்த போதே பிரிக்கப்பட்ட இரட்டையர்களின் கதாபாத்திரத்தை ஏற்று இரட்டை வேடத்தில் நடித்தார். அப்படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இரண்டாவது படம் பெயரளவிற்கே பிரபலப்பட்டது.
 
1998-ஆம் ஆண்டு சல்மான் கான் நடித்த ஐந்து வித்தியாசமான திரைப்படங்கள் வெளியாயின. கஜோலுடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை படமான பியார் கியா தோ டர்னா கியா திரைப்படம் அவருக்கு அவ்வாண்டின் முதல் படமாக அமைந்தது. அது அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இதை தொடர்ந்து வெளியான ஜப் பியார் கிசிசே ஹோதா ஹே]] திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.
 
 இந்த படத்தில் கானின் நடிப்பு அவருக்கு பல நல்ல பாராட்டுக்களைப் பெற்று தந்தது என்பதுடன் விமர்சகர்களிடம் இருந்தும் ஆதரவான விமர்சனங்களை அளித்தது. அவர் அதே ஆண்டில் அறிமுக இயக்குனரான கரண் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஷாருக்கான் மற்றும் கஜோலுடன் இணைந்து நடத்த இப்படத்தில், அவர் அமன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் பின்பகுதியில் சிறிய காட்சியில் மட்டுமே தோன்றி இருந்தார். எவ்வாறிருப்பினும், அதுவும் அவருக்கு பாராட்டைப் பெற்று தந்தது.
 
1999ல், கான் மூன்று வெற்றிப்படங்களில் நடித்தார்: ஹம் சாத் சாத் ஹே: வீ ஸ்டேண்ட் யுனெடட் என்ற படம் சூரஜ் பர்ஜத்யாவுடன் அவரை மூன்றாவது முறையாக அணி சேர்த்தது; பீவி நம்பர் 1, இது அந்த ஆண்டில் அதிக வசூலீட்டிய திரைப்படமாக அமைந்தது; ஹம் தில் தே சுக்கே சனம், இது ஒரு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன், அவரை மற்றொரு முறை மீண்டும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கான பரிந்துரையிலும் கொண்டு வந்து சேர்த்தது.
 
2000-ஆம் ஆண்டு, கான் ஆறு படங்களில் நடித்திருந்தார். இவற்றில் சுமாரான வெற்றியைப் பெற்ற ஹர் தில் ஜோ பியார் கரேன்கா மற்றும் சோரி சோரி சுப்கே சுப்கே ஆகிய இரண்டு படங்களைத் தவிர பெரும்பாலானவை படுமோசமாகவும், வர்த்தகரீதியாகவும் தோல்வி அடைந்தன. அந்த இரண்டு படங்களிலும் முறையே ராணி முகர்ஜி மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். 2001 வரை தாமதமாகி வெளியான சோரி சோரி சுப்கே சுப்கே திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் கான் ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் கதாபாத்திரத்தைக் கையாண்டிருந்தார்.
 
2002-ஆம் ஆண்டு வெளியான ஹம் தும்ஹாரே ஹே சனம் படத்திலும் இவர் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபிஸில் ஓரளவிற்கு வெற்றி பெற்றது.
 
2003-ஆம் ஆண்டு வெளியான தேரே நாம் படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்யும் வரை கானின் தொடர்ச்சியான படங்கள் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தன. இந்த படம் நல்ல வசூலை எட்டியது. அத்துடன் அவரின் நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. “சல்மான் கான் அந்த T கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக பொருந்துகிறார். சிரமமான காட்சிகளிலும் அவர் அற்புதமாக நடிக்கிறார்.” என்று திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து முஜ்சே ஷாதி கரோகி (2004) மற்றும் நோ என்ட்ரி (2005) ஆகிய நகைச்சுவை படங்களுடன் பாக்ஸ் ஆபீசில் தமது வெற்றியைத் தொடர்ந்தார்.
 
 ஜானே மன் மற்றும் பாபுல் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் சரியாக வெற்றியடையாததால் 2006ஆம் ஆண்டு அவருக்கு ஒரு தோல்விகரமான ஆண்டாக அமைந்தது.
 
2007ஆம் ஆண்டை, சல்மான் கான் சலாம் ஈ இஸ்க் படத்துடன் தொடங்கினார். அதுவும் பாக்ஸ் ஆபிசில் வெற்றியைக் காட்டவில்லை. அவரின் அடுத்த படமான பார்ட்னர் பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றி பெற்றது, அடுத்ததாக அவர் தம் முதல் ஹாலிவுட் திரைப்படமான மேரிகோல்டு: அட்வன்சர் இன் இந்தியா என்ற படத்தில் அமெரிக்க நடிகை அலி லார்டெருடன் நடித்தார். ஓர் இந்திய ஆணுக்கும், ஓர் அமெரிக்க பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சொல்லும் இப்படம் வர்த்தகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.
 
2008 முழுவதும் கான் மூன்று படங்களில் நடித்தார், அவை அனைத்துமே தோல்வி அடைந்தன. ஜிம் கேரியின் ஹாலிவுட் வெற்றிப்படமான புரூஸ் ஆல்மைட்டி என்பதை தழுவி காட் துஸ்சே கிரேட் ஹோ என்ற படம் என்பது உருவாக்கப்பட்டது. இந்த படம் படுமோசமான தோல்வியைத் தழுவியது. 
 
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.