சல்மான் கான் மடியில் ஷாருக்கான்: வைரலாகும் ஜீரோ பட டீஸர்
பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடனமாடும் ஜீரோ படத்தின் டீஸர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனுஷ் நடித்த அம்பிகாபதி, மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படம் ஜீரோ.
இந்தப்படத்தில் ஷாருக்கான் ஹிரோவாக நடிக்க ஹீரோயின்களாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். மேலும், கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் ரம்ஜானை முன்னிட்டு இணையதளத்தில் சமீபத்தில் வெளியானது. இந்த டீஸரில் குள்ள மனிதராக ஷாருக்கான் உள்ளார். அவருடன் நடிகர் சல்மான் இணைந்து நடனமாடுவது போலவும், ஷாருக்கானை, சல்மான் கான் மடியில் தூக்கி வைத்துக்கொள்வது போன்ற காட்சிகள் உள்ளது. ஷாருக்கானும் சல்மான் கானும் 10 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்கள் இந்த டீஸரை கொண்டாடி வருகின்றனர்.