1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (14:46 IST)

சசிகுமாரின் அடுத்த படத்தில் நாயகியாகும் பிக்பாஸ் நடிகை

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டு அவதாரங்களில் ஜொலித்து வரும் சசிகுமார் ஏற்கனவே கொம்பு வச்ச சிங்கம், சிங்கமடா, ராஜவம்ச, நா நா, பரமகுரு, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் 
 
இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’பகைவனுக்கு அருள்வாய்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனிஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘திருமணம் என்னும் நிக்கா’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சசிகுமார் ஜோடியாக வாணிபூஜன் மற்றும் பிக்பாஸ் புகழ் பிந்து மாதவி நடிக்க உள்ளனர் பிந்து மாதவி என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்தை வாங்கி மன்க்கி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. விறுவிறுப்பாக மூன்றே கட்டத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன