1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (10:24 IST)

எம் ஜி ஆர் மகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு – துணிந்து இறங்கும் சசிகுமார்!

சசிகுமார், சத்யராஜ் மற்றும் சமுத்திரக்கனி நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து வரிசையாக வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். இதில் கடைசியாக வெளிவந்த சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து பொன்ராம் தனது அடுத்தபடத்தை சசிகுமாரை வைத்து இயக்கி வருகிறார்.

அந்த படத்துக்கு எம்.ஜி.ஆர். மகன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் சசிகுமாரோடு சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான பொன்ராம்.

கொரோனா காரணமாக திரையரங்குக்கு கூட்டம் வருவது குறைந்துள்ள நிலையில் துணிந்து இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.