திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:54 IST)

வெற்றிமாறனின் அடுத்த படத்துக்கான வேலைகள் ஜரூர் – அடர்காட்டில் பணிபுரியும் படக்குழு!

வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்திற்காக சத்தியமங்கலம் காட்டினுள் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் வெற்றிமாறன் திடீரென அந்த கதையை பிரிதொரு சமயத்தில் எடுத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம். அதற்கு பதிலாக இப்போது வேறு ஒரு கதையை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த படத்துக்காக சூரி நீண்டகாலமாக எந்த படமும் ஒத்துக் கொள்ளாமல் தாடி எல்லாம் வளர்த்து வந்தார். இதனால் வெற்றிமாறனின் இந்த முடிவு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இதையடுத்து இப்போது சத்தியமங்கலம் காடுகளில் படப்பிடிப்பு நடத்துவதற்காக செட் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனராம் படக்குழு.