திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:24 IST)

படம் தான் ரிலீஸ் இல்லை, டிரைலராவது விடுவோம்: சசிகுமார் படக்குழு!

படம் தான் ரிலீஸ் இல்லை, டிரைலராவது விடுவோம்:
வரும் தீபாவளி அன்று திரைக்கு 4 படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது., ஜிவாவின் களத்தில் சந்திப்போம், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன், சந்தானம் நடித்த பிஸ்கோத் மற்றும் சந்தோஷ் ஜெயகுமாரின் இரண்டாம் குத்து’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நான்கு படங்களின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் இந்த நான்கு படங்களும் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்
 
இந்த நிலையில் திடீரென சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் திரைப்படம் தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. இருப்பினும் தீபாவளி அன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் களத்தில் சந்திப்போம் படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவிதமான விளம்பரமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு வரும் தீபாவளியன்று இரண்டாம் குத்து, மரிஜூவானா மற்றும் பிஸ்கோத் ஆகிய 3 படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகிறது என்பதும் மூக்குத்தி அம்மன் ஓடிடியில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது