வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (19:46 IST)

"அஜித் 60வது படத்தில் பிக்பாஸ் 3 பிரபலம்" - யார் அந்த அதிர்ஷ்டசாலின்னுபாருங்க!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தனது 60-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.  


 
அஜித் பைக் ரேஸராக நடிக்கவுள்ள இப்படம் அவரின் கடந்த கால வாழக்கையை சுவாரஸ்யமாக சொல்லும் விதத்தில் உருவாக உள்ளது. AK 60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்தப் படத்துக்காக பணிகளுக்காக சமீபத்தில் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஐரோப்பாவுக்கு சென்றுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி படத்தின் மீத எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 


 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 3 ல் இருந்து சமீபத்தில் வெளிவந்துள்ள ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள இந்த தகவல் பற்றி கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.