அஜித் 60 படத்தின் இசையமைப்பாளர் இவரா? வெளியான சமீபத்திய தகவல்!

Last Updated: புதன், 31 ஜூலை 2019 (12:22 IST)
நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை  தொடர்ந்து மீண்டும் எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இப்படம் பைக் ரேஸ் கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 


 
வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கிடையில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், அஜித்தின் அடுத்த படத்தை தானே இயக்கவுள்ளதாகவும், அதில் அஜித் பைக் ரேஸராக நடிக்கவுள்ளதாகவும் தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் போனி கபூர். 


 
இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தை பற்றிய மாற்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசைப்புயல்  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஏ.ஆர்.ரகுமானை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


இதில் மேலும் படிக்கவும் :