'தல 60' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Last Modified திங்கள், 29 ஜூலை 2019 (22:40 IST)
தல அஜித் நடித்த 59வது திரைப்படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த படம் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியாவதால் இந்த படம் ஓப்பனிங் வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இன்று ஒரு டுவிட்டை பதிவு செய்து அஜித் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே அழைத்து சென்றுள்ளார். 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்திற்காக ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் தனது நன்றி என தெரிவித்த போனிகபூர், தனது அடுத்த தயாரிப்பான 'தல 60' திரைப்படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாகவும், அதே நாளில் படப்பிடிப்பும் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இந்த சூப்பர் அறிவிப்பால் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. உடனே அஜித் ரசிகர்கள் 'ஏகே60' என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் தெறிக்க விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கும் இந்த படம், ஒரு மோட்டார் சைக்கிள் ரேஸ் குறித்த படம் என்றும், இந்த படத்தில் ஒரு ரேஸர் கேரக்டரில் அஜித் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய தோற்றத்தில் அஜித்தின் கெட்டப் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அஜித் உண்மையிலேயே ஒரு ரேஸர் என்பதால் இந்த படம் தெறிக்க வைக்கும் என சொல்லவே தேவையில்லை


இதில் மேலும் படிக்கவும் :