செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (10:17 IST)

வீட்டில் உள்ள பெண்களை வச்சு செய்து கொடூர வில்லனா மாறிய நிரூப்!

இந்த சீசன் பிக்பாஸில் தான் காதல் இல்லாமல் வில்லனாகவும், ஒப்பாரி வைப்பவர்களாகவும் பார்க்கமுடிகிறது. நிரூப் நெருப்பு இந்த வாரம் பத்திகிட்டு எரிய போகுது... ஆம், வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களை ஒரு குறிப்பிட்ட டைம் கொடுத்துவிட்டு அதற்குள் ரெடியாகி டைனிங் ஏரியாவுக்கு வரவேண்டும் என நிபந்தனை விதிக்கிறார். 
 
நேரம் தவறி வந்தவர்கள் பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சாப்பிடவேண்டும் என தண்டனையும் கொடுத்து பெண்களின் வெறுப்பு ஆளாகியுள்ளார். இருந்தும் நிரூப் பிக்பாஸை விட சிறப்பாக டாஸ்க் கொடுத்து அலறவிடுகிறார் என ஆடியன்ஸ் ஊறி வருகின்றனர்.  இதையே இசைவாணி செய்திருந்தால் அவரை Attitude என கூறி அடக்கி வைத்திருப்பார்கள். எனினும் இந்த வாரம் நிச்சயம் நிகழ்ச்சி ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதே பலரது எண்ணமாக உள்ளது.