1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (16:10 IST)

ஸ்ருதி தரமான உருட்டுமா... மக்கள் ஒட்டு வாங்க எப்புடியெல்லாம் நடிக்குது இந்த பொண்ணு!

ஸ்ருதி தரமான உருட்டுமா... மக்கள் ஒட்டு வாங்க எப்புடியெல்லாம் நடிக்குது இந்த பொண்ணு!
 
பிக்பாஸில் ஸ்ருதி தாமரைக்கு இடையில் நாணயம் திருட்டு விவகாரத்தில் மிகப்பெரும் சண்டை வெடித்தது. தாமரை உடை மாற்றும் போது ஸ்ருதி நாணயம் திருடியது தான் இந்த சண்டைக்கு காரணம் என பேசப்பட்டது. அதை குறித்து கமலும் இந்த வார நிகழ்ச்சியில் பேசியிருந்தார். 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யார் யாரை காப்பாற்றவேண்டுமோ அவரது புகைப்படத்தை பட்டாசு வெடித்து கொளுத்தவேண்டும். அதில் ஸ்ருதி தாமரையும் போட்டோவுக்கு பட்டாசு வெடித்து அவருக்கு இந்த பிளாட் பார்ம் மிகவும் முக்கியம் என கூறி கொளுத்தினார். மக்கள் ஒட்டு வாங்க எப்படியெல்லாம் உருட்டுது இந்த பொண்ணு என நெட்டிசன்ஸ் பலரும் கூறி வருகின்றனர்.