செவ்வாய், 11 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (10:48 IST)

இயற்கை அன்னையின் மடியில் தவழும் தூய்மையான குழந்தை! மிஷ்கின் இரங்கல்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு மிஷ்கின் மிகவும் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் களையும் உலுக்கியது என்பதும் அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் மிகவும் உருக்கமான இரங்கல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் ‘இந்த செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னை தொலைபேசியில் அழைத்து நாம் சேர்ந்து படம் செய்யலாம் என்று சொன்னார். நான் சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த படம் அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. அவர் மிகவும் வெளிப்படையாக பட்ஜெட் மிக அதிகமாக ஆகும் என்று கூறினார். பின்னர் நாங்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.

புனித் நீங்கள் சினிமா ஹீரோ மட்டுமல்ல. உண்மையான ஹீரோ. உங்கள் அன்பால் பல நண்பர்களையும் ரசிகர்களையும் பெற்றுள்ளீர்கள். இயற்கை அன்னை தங்களை தன் மடியில் தவழ வைக்க தூய்மையான குழந்தை. உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்மையை உணர்வோம்’ எனக் கூறியுள்ளார்.