சனிக்கிழமை வரட்டும் அவர்கிட்ட பேசிக்கிறேன்னு சொன்னாங்கல இந்த வந்துட்டேன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோ!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வார இறுதி நாள் என்றாலே ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. அதுவும் கடந்த வாரம் முழுக்க வீட்டில் நாணயம் திருட்டு விவகாரத்தில் செம ரகளை நடந்துள்ளது. தாமரை ஸ்ருதி உடுத்தும் உடை வரை விமர்த்தித்து பேசியிருந்தார்.
அதையெல்லாம் ஆண்டவர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்க வந்துள்ளார். முதல் ப்ரோமோ வீடியோவில், பிக்பாஸ் ரூல்ஸ் குறித்து பேசி சண்டையிட்ட தாமரை ஸ்ருதி விவகாரத்தை குறித்து தான் கமல் பேசுகிறார். சனிக்கிழமை வரட்டும் நான் அவர் கிட்டயே பேசிக்குறேன் என தாமரை மற்றும் தலைவி இசைவாணி உள்ளிட்டரோ கூறியிருந்தனர். அவர்களுடன் பேசுவதற்கு தான் தயாராகி வந்திருப்பதாக கமல் இந்த முதல் ப்ரோமோவில் கூறியுள்ளார்.