ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள்

Last Modified திங்கள், 15 ஜூலை 2019 (20:21 IST)
கோலிவுட் திரையுலகில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் இல்லாமல் பாதி தியேட்டர் கூட நிரம்பாமல் உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் தான் தியேட்டர்கள் ரசிகர்களால் நிரம்பும் என்றும், கூடிய விரைவில் பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் பெரிய நடிகர்களின் படங்கள் அதிகம் வெளியாகவிருப்பதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 8ஆம் தேதி அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படமும், ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படமும், வெளியாக உள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நான்கு திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால் கிட்டத்தட்ட ஆகஸ்ட் மாதம் முழுவதுமே திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :