ரஜினி, கமல், அஜித், விஜய் அரசியல் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர்

Last Modified திங்கள், 15 ஜூலை 2019 (19:24 IST)
பிரபல ஜோதிடர் பாலாஜி என்பவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவை கிட்டத்தட்ட சரியாக கணித்தார்

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெறும் என்றும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் என்றும், நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். மேலும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கணித்திருந்தார்.
இவர் கணித்ததில் நியூசிலாந்து கோப்பையை வெல்லும் என்று கூறியது மட்டுமே பலிக்கவில்லை. அதுவும் கூட போட்டியிலும், சூப்பர் ஓவரிலும் சம ரன்களையே நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. கிரிக்கெட்டின் புதிய விதியால்தான் நியூசிலாந்து அணி கோப்பையை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி, கமல், அஜித் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து இவர் தற்போது கணித்துள்ளார். ரஜினிக்கு அரசியலில் மக்களின் ஆதரவு இருக்காது என்றும், கமல்ஹாசன் தவறுகளை சுட்டிக்காட்டும் நபராக மட்டுமே இருப்பார் என்றும், நடிகர் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்றும், அஜித்தும் அரசியலுக்கு வர மாட்டார், ஆனால் அதே நேரத்தில் சர்வதேச தரம் வாய்ந்த திரைப்படங்களை கொடுப்பார் என்றும் கணித்துள்ளார். இந்த கணிப்புகள் குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை கமெண்ட் பகுதியில் குறிப்பிடவும்இதில் மேலும் படிக்கவும் :