"இன்று மாலை தரமான சம்பவமிருக்கு" - போஸ்டருடன் அலார்ட் செய்த போனி கபூர்!

Last Updated: திங்கள், 15 ஜூலை 2019 (15:07 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்து ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 


 
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தை அடுத்து இந்தியில் அஜித்தை வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று கூறியிருந்தார் போனி கபூர். அப்படி மட்டும் நடந்தால் அஜித்தின் ரசிகர்களுக்கு பேரின்பமாக இருக்கும். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், இன்று மாலை 6 மணிக்கு படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக போஸ்டருடன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் போனி கபூர்.


இதில் மேலும் படிக்கவும் :