திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (18:09 IST)

பிக்பாஸால் வேலைக் கிடைக்கும் என உத்தரவாதம் இல்லை – ஷாரிக் கருத்து!

பிக்பாஸ் பிரபலம் ஷாரிக் பிக்பாஸ் மூலமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என உறுதியாக சொல்லமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட நடிகர்களில் ஒருவர் ஷாரின் என்பது தெரிந்ததே. இவர் பிரபல நடிகர் ரியாஸ் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் இதுவரை ஷாரிக்கிற்கு எந்தவித வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவரது வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

மோகன் தண்டாயுதபாணி என்பவர் இயக்கி வரும் ’காலம் நேரம் காதல்’ என்ற வெப்தொடரில் ஸ்ரீநிதி சுதர்சன் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் தான் ஷாரிக் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ’பிக்பாஸ் உங்களை  மிகப்பெரிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும்.  அதன் மூலம் விளம்பரப் படம் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வரும். ஆனால், பிக் பாஸால் வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. ‘ எனத் தெரிவித்துள்ளார்.