திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (17:52 IST)

எனக்கு மட்டும்தான் சூரரைப் போற்று திரைப்படம் பிடிக்கலை போல – பிக்பாஸ் வைஷ்ணவி ஓபன் டாக்!

பிக்பாஸ் மூலமாக பிரபலமான வைஷ்ணவி சூரரைப் போற்று திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை என சொல்லியுள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் வைஷ்ணவி. இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘சூரரைப் போற்று திரைப்படம் எனக்கு மட்டும்தான் பிடிக்கவில்லை போல’ எனத் தெரிவிக்க ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் அவரை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளது. மற்றொரு சாரரோ ’ஒரு படம் பிடிக்கலைன்னு சொல்லக்கூட அவருக்கு உரிமை இல்லையா ‘ என அவருக்கு ஆதரவாக தெரிவித்துள்ளது.