1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (07:19 IST)

பிக்பாஸ் லாஸ்லியா தந்தை காலமானார்!

பிக்பாஸ் லாஸ்லியா தந்தை காலமானார்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லாஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை நேற்று திடீரென காலமானதாக வெளி வந்திருக்கும் செய்தியை அவரது ஆர்மியினர் மற்றும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது
 
கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகுதான் நிகழ்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. அவர் தனது மகளை கண்டித்தது மட்டுமன்றி தனது மகனை காதலிக்கும் கவினையும் நாசூக்காக அவரது தவறை எடுத்துக் கூறியது ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்ததாக பலர் கருத்து கூறினர் 
 
இந்த நிலையில் நேற்று லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. தனது டுவிட்டர் பக்கத்தில் லாஸ்லியாவும் இதனை உறுதி செய்துள்ளார் 
 
மரியநேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது லாஸ்லியாவின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது