1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:34 IST)

காலம் தப்பிப் பிறந்துவிட்டேனோ… இளம் நடிகையைப் பார்த்து ஜொள்ளு விட்ட பாரதிராஜா!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது படக்குழுவை வாழ்த்தி பேசிய பாரதிராஜா கதாநாயகி சம்யுக்தாவைப் பற்றி பேசும்போது “சம்யுக்தாவைப் பார்க்கும் காலம் தப்பி பிறந்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. கடலோரக் கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும் போது காதலித்து விடுவேனோ என்று தோன்றுகிறது” எனக் கூறிப் பேசி படக்குழுவினரைக் கலகலப்பாக்கினார்.