1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (10:31 IST)

தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்… சோசியல் மீடியாவில் புலம்பிய ஜோஜு ஜார்ஜ்

மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ஜோஜு ஜார்ஜ்.  தமிழில் ஜகமே தந்திரம் படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பஃபூன் படத்திலும் நடித்தார். இந்த இரு படங்களிலும் அவரின் நடிப்பு பரவலாக கவனம் பெற்றது.

இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தேவையில்லாத பிரச்சனைகளுக்குள் தன்னை இழுத்து விடுவதாகவும், அதனால் எல்லா விதமான சமூகவலைதளங்களில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் எர்ணாகுளம் அருகே இவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் பலமணிநேரம் போக்குவரத்து தடைபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஜோஜு காங்கிரஸ் கட்சியினரிடம் சென்று வாக்குவாதம் செய்ததாகவும், இந்த போராட்டத்தால் பொதுமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் கூறி கோபமாக பேசி அது சம்மந்தமான சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.