வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (16:00 IST)

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

GOAT
ஆயிரம் கோடி வசூல் ஈட்டும் என பில்டப் விடப்பட்ட கோட் திரைப்படம் தற்போது ரூ.500 கோடியை எட்டுவதே கேள்விக்குறியாக உள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்த கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் சுமார் ரூ.400 கோடி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கிய கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். 
 
இப்படத்தில் விஜய் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் மிரட்டி இருந்தார். இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும்   உலகளவில் ரூ.126 கோடி வசூலித்தது. ஆனால் போகப்போக படத்திற்கு சற்று நெகடிவ் விமர்சனங்கள் வந்ததால் வசூலும் மளமளவென சரியத் தொடங்கின. முதல் வாரத்தில் வசூல் வேட்டையாடிய கோட் திரைப்படம் இரண்டாம் வாரத்தில் இருந்து டல் அடிக்க தொடங்கியது. 
 
ஆரம்பத்தில் ஆயிரம் கோடி வசூல் ஈட்டும் என பில்டப் விடப்பட்ட கோட் திரைப்படம் தற்போது ரூ.500 கோடியை எட்டுவதே கேள்விக்குறியாக உள்ளது.  13 நாட்கள் முடிவில் கோட் திரைப்படம் வெறும் 407 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் கோட் திரைப்படம் ரூ.226 கோடி வசூலித்து இருக்கிறது.

இப்படம் இன்னும் இரு தினங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கிவிடுவார்கள் என்பதால் கோட் ரூ.500 கோடி வசூலை எட்டுவதே கஷ்டம் தான் என சொல்லப்படுகிறது.