வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:00 IST)

இன்னும் எவ்ளோ தூரம்மா நடப்பா? சீரியல் நடிகையை ட்ரோல் செய்து வெளியாகும் மீம்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடரின் கண்ணம்மா குறித்து மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் இப்பொது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் அந்த தொடரின் நாயகி கண்ணம்மா தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதால் அவரிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வது போல ஒரு சீக்வன்ஸ் இடம்பெற்றிருந்தது. அதில் கண்ணம்மா நடந்து செல்வது போன்ற காட்சிகள் ஒரு வாரத்துக்கும் மேல் ஒளிபரப்பப் படுவதால் இப்போது அது குறித்த மீம்ஸ்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.