திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:47 IST)

விஜய்யுடன் நடித்துள்ள மேகா ஆகாஷ்… வைரலாகும் வீடியோ!

நடிகை மேகா ஆகாஷ் விஜய்யுடன் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

நடிகை மேகா ஆகாஷுக்கு முதல்படமே கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த படம் மிகவும் தாமதமானதால் அதற்கிடையில் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் இவர் தளபதி விஜய்யுடன் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடித்துள்ளார். அது சம்மந்தமான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.