செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (17:03 IST)

வசூலில் புதிய சாதனையை நெருங்கும் பாகுபலி 2

கடந்த வருடம் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் 2 ஆயிரம் கோடி வசூலை நெருங்கியுள்ளது.
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி 2’. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். 
 
மிகப்பெரிய வரலாற்றுப் படமான இது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸாகி. 1700 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
 
இந்நிலையில், பாகுபலி 2’, சீன மொழியில் டப் செய்யப்பட்டு சில வாரங்களுக்கு முன் அங்குள்ள 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸாகி இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பாகுபலி 2’ படம் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.