தூசு தட்டப்படுகிறதா சிவகார்த்திகேயனின் அயலான் படம்… ரிலீஸ் தேதி குறித்த தகவல்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக அயலான் திரைப்படம் உருவாகி ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
அயலான் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 5 க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி விட்டன. ஆனால் அயலான் நிலை என்னவென்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான RD ராஜா தயாரித்தார். பின்னர் அவரிடம் இருந்து கே ஜே ஆர் நிறுவனம் கைப்பற்றி தயாரித்தது.
கடந்த ஆண்டு ஷூட்டிங் முடிந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது அந்த பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அயலான் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இப்போது வரை உறுதியாகவில்லை என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது மீண்டும் அந்த படத்தைத் தொடங்குவது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.