செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:57 IST)

ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’  திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் படம் ஒரு வாரத்துக்குள்ளாகவே பெரும்பாலான திரைகளில் இருந்து தூக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால் தெலுங்கிலும் மோசமான வரவேற்பையே இந்த படம் பெற்றது.

இந்நிலையில் இப்போது ஒரு மாதம் கழித்து பிரின்ஸ் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.