திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (18:07 IST)

அஜித்-சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு.. அடுத்தகட்ட திட்டம் என்ன?

ajith and sivakarthikeyan
அஜித்-சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு.. அடுத்தகட்ட திட்டம் என்ன?
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்த செய்திகள் வெளியான நிலையில் தற்போது அஜித்தையும் சந்தித்துள்ளார் 
 
அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஸ்டூடியோவில் அஜித்தை சிவகார்த்திகேயன் செய்துள்ளதாக தெரிகிறது
 
அஜித்துடன் நடந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அஜீத்தை சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது என்றும் அவர் கூறிய பாசிட்டிவ் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார்
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்து இருப்பதால் ஏதாவது திட்டம் இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
 
Edited by Mahendran