ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:17 IST)

“அந்த நடிகரை மாற்றுங்கள்… நான் ஜிகர்தண்டாவில் நடிக்கிறேன்”… சிவகார்த்திகேயன் போட்ட கண்டீஷன்!

ஜிகர்தண்டா படத்தில் முதலில் சிவகார்த்திகேயனைதான் கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பியதாக கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கதிரேசனே இந்த பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா படத்தில் முதலில் சிவகார்த்திகேயனைதான், சித்தார்த் நடித்த வேடத்தில் நடிக்க வைக்க விரும்பினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “அப்போது சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்து வந்தார். கதையைக் கேட்ட அவர் வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹா வேண்டாம், சத்யராஜ் போன்ற வீரரை நடிக்க வையுங்கள். நான் கண்டிப்பாக நடிக்கிறேன் எனக் கூறினார். ஆனால் நான் அந்த கதாபாத்திரத்துக்கு பாபிதான் நடிக்கவேண்டும் என உறுதியாக இருந்ததால் அது நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.