புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 10 அக்டோபர் 2018 (13:49 IST)

தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கூறும் பிரபல நடிகை...

தமிழில் விஜயகாந்த்  நடித்த கஜேந்திரா படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் நடிகை புளோரா. அப்போது பிரபல நடிகையாகவும் வளம் வந்தவர். பின் பல முன்னனி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். ஆஷா சைனி என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் தன் நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் புளோரா  தயாரிப்பாளர் கவுரங் தோஷி தாக்கியதால் காயம் அடைந்ததாக  தன் காயம் பட்ட முகத்தை அவர் புகைப்படமாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
 
தயாரிப்பாளர் கவுரங் தோஷியும் நானும் பல இடங்களுக்கு ஒன்றாக இணைந்து சென்று சுற்றினோம். கடந்த 2007ஆம் ஆண்டு காதலர் தினத்தில் அவர் என்னை திட்டி பலமாக தாக்கினார். அதனைதொடர்ந்து ஒருவருடமாக அவர் எனக்கு அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
 
ஒருகட்டத்தில் என்னை அவர் பலமாக தாக்கினார்.அதனால் அவரை விட்டு விலகினேன். அவரைக் குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை ஏனென்றால் அவர் செல்வாக்குமிக்கவராக இருந்தார்.
 
இருப்பிணும் நான் சினிமாவுக்கு புதிது என்பதால் அவரை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
திரையுலகை சேர்ந்த நடிகைககள் பலரும் பாலியல் புகார்கள் கூறிவருவதால் தவறு செய்தவர்களுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது.