1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2025 (09:22 IST)

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படம் பற்றி வெளியான முக்கிய அப்டேட்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றார் இயக்குனர் மனு ஆனந்த். அதையடுத்து மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு தொடங்கி ஜூலை மாதத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் ரிலீஸாகும் எனப் படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். போஸ்டரை வைத்து பார்க்கும்போது படம் ஒரு காலப் பயணம் சம்மந்தப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.