ஏன் பெரிய நடிகர்கள் என்னை நம்பவில்லை என தெரியவில்லை – இயக்குனர் பார்த்திபன் ஆதங்கம்!
தமிழ் சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டே இருப்பவர் இயக்குனர், நடிகர் பார்த்திபன். ஆனால் அந்த வித்தியாசத்தில் சில சமயம் கிருக்குத்தனம் அதிகமாகி சொல்லவந்த விஷயம் நழுவிவிடுவதால் அவரின் பெரும்பாலான படைப்புகள் பெருவாரியான வெற்றியைப் பெறுவதில்லை.
சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதைத் தவிர அந்த படத்தின் திரைக்கதையில் வித்தியாசமாக எதுவும் இல்லாமல் படம் வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் டீன்ஸ் என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். அதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “என்னிடம் 70 திரைக்கதைகள் உள்ளன. அதில் சில கமர்ஷியல் திரைக்கதைகள். அதையெல்லாம் பெரிய ஹீரோக்கள் இருந்தால்தான் பண்ண முடியும். ஆனால் என்னால் இப்போது அவர்களிடம் போய் நின்று வாய்ப்புக் கேட்க முடியாது. அவர்களாக அழைத்து என்னை இயக்க சொன்னால் இயக்குவேன். ஆனால் அவர்கள் ஏன் என்னை நம்பவில்லை என்று தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.