அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை
அண்ணாமலையால் அண்ணா சாலைக்கு வர முடியுமா என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்ட நிலையில், "அண்ணா சாலைக்கு எப்போது, எங்கு வரவேண்டும் என திமுகவினர் கூறட்டும். அப்போது நான் அண்ணா சாலையில் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு தனியாக வருகிறேன்," என்று அண்ணாமலை பதில் சவால் விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தபோது, "சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறேன். அண்ணா சாலைக்கு நான் எங்கு, எப்போது வரவேண்டும் என்று திமுகவினர் கூறட்டும். அங்கு நான் வருகிறேன். அண்ணா சாலையில் எந்த இடம் என்று குறிப்பிட்டுச் சொன்னால், தனியாக வருகிறேன். பாஜகவினர் யாரும் என்னுடன் வரமாட்டார்கள். திமுகவினர் அனைத்து படைகளையும் திரட்டி என்னை தடுத்து நிறுத்தி பார்க்கட்டும்," என்று தெரிவித்தார்.
"திமுக ஐடி வீங்கிற்கு ஒரு நாள் அவகாசம் தருகிறேன். 'கெட் அவுட் மோடி' என எவ்வளவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். நாளை காலை 6 மணிக்கு 'கெட் அவுட் ஸ்டாலின்' என்பதை பதிவிட போகிறேன். இது எவ்வளவு டிரெண்ட் ஆகிறது என்பதை மட்டும் பாருங்கள்," என்றும் கூறினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாறி மாறி சவால் விடுவது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran