அருள்நிதியின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடித்த தேஜாவு என்ற திரைப்படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாது சினம் உள்பட ஒருசில படங்களில் டித்தவர் நடிகர் அருள்நிதி
இவர் தற்போது டைரி, டி பிளாக், ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சாவு தேஜாவு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் தேஜாவு திரைப்படத்தின் டீசர் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது