1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:01 IST)

அருள்நிதியின் 'தேஜாவு ' பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடித்து வரும் தேஜாவு படத்தின்  முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி.

இவர் நடிப்பில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ள தேஜாவு படத்தின் 2 வது லுக் போஸ்டர் கடந்த 22 ஆம் தேதி வெளியானது.

இப்போது தேஜாவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிவருகிறார். இப்படத்தை விஜய் பாண்டி என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

 இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.