புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (14:56 IST)

சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சந்தானம் நடித்து முடித்துள்ள ஏஜனெட் கண்ணாயிரம் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

நடிகர் சந்தானம் சமீபத்தில் நடித்த படங்களில் ஏ1 மற்றும் டிக்கிலோனா ஆகிய  படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்து உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்கான ஏஜண்ட கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்டரை படக்குழு சில மதங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாளை இந்த படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.