1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (18:53 IST)

அரவிந்தசாமியின் ‘ரெண்டகம்’ டீசர் ரிலீஸ்!

அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்த ‘ரெண்டகம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
அரவிந்த் சாமி நடிப்பில் ஃபெலினி  என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘ரெண்டகம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் சற்று முன் இணையதளங்களில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது 
 
இந்த படத்தின் டீசரை பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் அதிரடியாக காட்சிகள் இந்த டீசரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்து உள்ளார் என்பதும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் ரிலீசாகும் என்பது குறிப்பிடத்தக்கது