செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (07:30 IST)

கோட் படத்தின் முதல் சிங்கிள் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்து விட்ட நிலையில் அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் நடிகர் மோகன் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின்  தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது “ஏப்ரல் மாதத்தில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் உறுதியாக வெளியாகும்” என அப்டேட் கொடுத்துள்ளார்.