எப்படி இருக்கு விஜய் தேவரகொண்டாவின் ‘பேமிலி ஸ்டார்’ டிரைலர்?
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தமிழ்நாட்டில் இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்றது. இதையடுத்து இப்போது விஜய் தேவரகொண்டா பரசுராம் இயக்கத்தில் பேமிலி ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க தில் ராஜு தயாரிக்கிறார்.
ஏப்ரல் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது. குடும்ப செண்டிமெண்ட், காதல் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் என கலந்துகட்டிய ஒரு மசாலா பட டிரைலராக இந்த டிரைலர் வெளியாகியுள்ளது.