படத்தோட Promotion'னா எந்த எல்லைக்கு வேணாலும் போகும் அனுஷ்கா - ட்விட்டரில் புதிய கணக்கு
நடிகை அனுஷ்கா ஷெட்டி வரலாற்று படங்களில் நடிக்கும்போது மிகவும் கட்சிதமாக பொருந்தியிருப்பார். அருந்ததி, பாகுபலி போன்ற படங்களில் அனுஷ்காவின் நடிப்பு திறமை பலராலும் வியந்து பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு போன்ற இரு மொழிகளில் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.
தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள “நிசப்தம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைமில் நாளை அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை அனுஷ்கா ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். முதல் பதிவில், " அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது என் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு. சில சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு இதைப் பின் தொடருங்கள் என்று பதிவிட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அனுஷ்காவை வரவேற்றுள்ளனர்.