செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (08:19 IST)

நீயே நீயே..... "சைலன்ஸ்" படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “சைலன்ஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் விறு விறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.  வாய் பேசமுடியாமல், காது கேட்காமல் பேய்களிடம் மாட்டிக்கொள்ளும் அனுஷ்காவை அஞ்சலி காப்பாற்றி உண்மை என்ன என்பதை கண்டறிகிறார். பின்னர் இதெல்லாம் பேய்களால் நடக்கிறது என்பதை அறிந்துக்கொண்ட அஞ்சலி அதன் மீது நம்பிக்கையில்லாமல் தொடர்ந்து அனுஷ்காவை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. .

கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்ற இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் இடம் பெரும் "நீயே நீயே" என்ற பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்துள்ளது. இதோ அந்த பாடலின் லிங்க்..