திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj

பிரபல இளம் ஹீரோவின் படத்தில் வில்லனாக நடிக்கும் மாதவன் !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இவர் அலைபாயுதே முதல் அடுத்து மூன்று தினங்களில் ரிலீசாகவுள்ள சைலன்ஸ் வரை எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவர் பிரபல தெலுங்கு நடிகை அல்லுர் அர்ஜூன் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அல்லு அர்ஜூன் தெலுங்கில் புஷ்பா என்ற படத்தில் நடிக்கிறார். அதில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியிடம் கேட்டனர்., ஆனால் அவருக்கு கால்ஷீட் இல்லாதநிலையில் தற்போது மாதவனிடம் பேசி வருகின்றனர்.

மாதவன் ஏற்கனவே சமந்தாவின் கணவன் நாகசைதன்யாவின் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.