“அஜித், விஜய், சூர்யாவுடன் டூயட் பாட வேண்டும்” - ஆசைப்படும் அனுபமா பரமேஸ்வரன்
‘அஜித், விஜய், சூர்யாவுடன் டூயட் பாட வேண்டும்’ என்று ஆசைப்படுகிறார் அனுபமா பரமேஸ்வரன்.
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்வி அடைந்ததால், அவரைக் கண்டுகொள்ள ஆளில்லை. தற்போது நானி ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.
அனுபமாவுக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாராவாம். அவரைப் போல கதைகளைத் தேர்வுசெய்து நடிக்க வேண்டும் என்கிற அனுபமாவுக்கு, அஜித், விஜய், சூர்யாவுடன் டூயட் பாடி நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அனுபமா.