1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2017 (11:49 IST)

விஜய்க்கு செய்த உதவியை எனக்கும் செய்யுங்கள்: பாஜகவை நக்கல் செய்த உதயநிதி

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய பாஜகவின் தமிழக தலைவர்கள் தான் காரணம் என்று சின்னக்குழந்தை கூட கூறிவிடும். குறிப்பாக தமிழிசை செளந்திரராஜன் மற்றும் எச்.ராஜா ஆகியோர்களின் தேவையற்ற கமெண்ட்டுக்கள் 'மெர்சல்' படத்திற்கு இலவச விளம்பரத்தை உலகம் முழுவதும் தந்தது


 


இந்த நிலையில் விஜய்க்கு செய்த உதவியை எனக்கு செய்யுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் நக்கலுடன் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, 'மெர்சல் படத்திற்கு முழு புரமோஷன் கொடுத்தது பாஜகதான். அதேபோல் என்னுடைய 'இப்படை வெல்லும்' படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம்ன்னு நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இதற்கு தனது டுவிட்டரில் பதிலளித்துள்ள எச்.ராஜா, ' 'ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்' என்று பதிலடி நக்கலை அளித்துள்ளார். தேசிய கட்சியாகவும், மத்தியில் ஆளும் கட்சியாகவும் இருக்கும் பாஜகவை படங்களின் புரமோஷன்களுக்கு பயன்படுத்தும் நிலை வந்துவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.