திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2017 (15:13 IST)

விஜய் இல்லாமல் நான் இல்லை; அஜித்தின் தீவிர ரசிகன் பெருமிதம்

விஜய் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை என அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் ஜெய் கூறியுள்ளார்.


 

 
விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி. இதில் ரீமா சென், விஜய்யின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி 15 வருடம் ஆன நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர்.
 
நடிகர் ஜெய் அறிமுகமானது பகவதி படத்தில்தான். தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். இருந்தாலும் அறிமுகமானது விஜய் தம்பியாக என்பதுதான் சிறப்பு. இந்நிலையில் ஜெய் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
 
எனது சினிமா வாழ்வில் 15 வருடங்களை இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி.
 
என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை என விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஜெய் அஜித்தின் தீவிர ரசிகன் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தற்போது அஜித்தை பின்பற்றி பைக் ரேசில் கலந்துக்கொண்டு வருகிறாராம்.