1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (10:36 IST)

வித்யாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதியின் மகன்; வைரல் புகைப்படம்

நடிகர் விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் எஅசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது பல படங்கள் கைவசம் உள்ள நிலையில், பிஸியாகவே வலம் வருகிறார். கடந்த ஆண்டிலும் அதிக படங்கள் நடித்த முன்னணி நடிகராக விஜய்  சேதுபதியே இருப்பார் எனக் கருதப்படுகிறது.

 
விஜய் சேதுபதி தற்போது பிரான்சில் 'ஜூங்கா' படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக 'வனமகன்' சாயீஷா நடித்து வருகிறார். மேலும்  இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்யாசமான  கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
இப்படத்தினை விஜய் சேதுபதியே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியின்  மகனும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.