அண்ணாத்த ரிலிஸ் தேதியில் திடிர் மாற்றம்? வலிமையுடன் மோதுகிறதா?
அண்ணாத்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.
படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தீபாவளிக்கு ரிலீஸாக இருந்த வலிமை திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப்போனது. ஆனால் இப்போது அண்ணாத்த திரைப்பட்மும் பொங்கலுக்கு தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் உலகம் முழுவதும் இன்னமும் பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. ரஜினிக்கு தமிழ்நாட்டை போலவே உலக அளவில் மார்க்கெட் இருப்பதால் அதை இழக்க முடியாது என்பதால் பொங்கலுக்கு தள்ளி வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.