செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (14:39 IST)

‘லோகேஷ்க்கு கார்… சூர்யாவுக்கு ரோலக்ஸ்… உங்களுக்கு என்ன?’… அனிருத் சொன்ன ‘நச்’ பதில்!

விக்ரம் படத்தின் வெற்றியால் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பரிசுகளை வழங்கி வந்தார்.

விக்ரம் திரைப்படம் படக்குழுவினரே எதிர்பார்க்காத மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக மட்டும் 300 கோடி ரூபாய் வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வெற்றி நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசனை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் இயக்குனர் லோகேஷ்க்கு புதிய கார் ஒன்றையும், நடிகர் சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோல்கஸ் கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார். அதுமட்டுமில்லாமல் லோகேஷின் உதவியாளர்களுக்கு 13 மோட்டார் சைக்கிள்களை பரிசாக அளித்தார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு அவர் என்ன பரிசுகொடுப்பார் என்று மீம்களும் பதிவுகளும் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டன. இதை அனிருத்திடமே ஒரு பத்திரிக்கையாளர் சமீபத்தில் கேட்டுவிட, அதற்கு அனிருத் “விக்ரம் படம் கொடுத்தார்” என உடனடியாக பதிலளித்துள்ளார்.