1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (19:28 IST)

’விக்ரம்’ படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்காது: பிரபல தயாரிப்பாளர்!

vikram
’விக்ரம்’ படத்தின் வசூலை இந்த ஆண்டிற்குள் எந்த படமும் முறியடிக்காது என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். 
 
பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கேயார் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியபோது ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் என்றும் தமிழ் சினிமாவின் மானத்தை காப்பாற்றிய படம் என்றும் கூறினார்
 
’விக்ரம்’ படத்தின் வசூலில் ஒரே வாரத்தில் கமல்ஹாசனுக்கு 50 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது என்றும் சமீபத்தில் வெளியான எந்த படமும் இந்த அளவுக்கு லாபம் பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். 
 
மேலும் ’விக்ரம்’ படத்தின் வசூலை இந்த ஆண்டில் எந்த படமும் முறியடிக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்த படம் பல சாதனைகளை செய்யும் அவரது என்பவர் அவர் கூறினார்.