திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (21:16 IST)

தமிழக முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன்: விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து!

mks kamal
தமிழக முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன்: விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கமல்ஹாசன் சந்தித்து விக்ரம்  படத்தின் வெற்றிக்கு வாழ்த்து பெற்றார். இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நிகழ்ந்தது. மனமும் நெகிழ்ந்தது. 
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (14-06-2022)முகாம் அலுவலகத்தில், திரு. கமல்ஹாசன் அவர்கள் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி சந்தித்தார். விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் திரு. ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.